மன்னார்குடி மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா – ஏராளமான பக்தர்கள் திரள்கூடி வழிபாடு. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 October 2025

மன்னார்குடி மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா – ஏராளமான பக்தர்கள் திரள்கூடி வழிபாடு.


மன்னார்குடி, அக். 27 -

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவாக சூரசம்ஹார விழா இன்று (அக்.27) மிக விமர்சையாக நடைபெற்றது. பழமையான முருகன் திருக்கோவிலாகிய மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில், சாமி தேரில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தார். பின்னர், கிராமத்தின் பொது இடத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.


சூரபத்மன் பல்வேறு வடிவங்களில் தோன்றி முருகப்பெருமானின் முன் எழுந்தருள, அதனைத் தொடர்ந்து வேல் கொண்டு சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு ஏராளமான பக்தர்கள் “முருகா! முருகா!” என்று கோஷமிட்டுக் கொண்டு சாமி தரிசனம் செய்து மெய்சிலிர்த்தனர்.

– திருவாரூர் மாவட்ட செய்தியாளர் தருண்சுரேஷ்

No comments:

Post a Comment

Post Top Ad